News
“பிரபுக்களாக நடமாடிய குற்றவாளிகளுக்கு எதிராக இன்று சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.”

“பிரபுக்களாக நடமாடிய குற்றவாளிகளுக்கு எதிராக இன்று சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த நடவடிக்கைகளில் அரசியல் ரீதியாக தலையிட்டு அவற்றை அவசரப்படுத்த முயற்சிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், நீதிமன்றம் மக்கள் ஆணையைப் புரிந்துகொண்டு சரியான முறையில் செயற்படும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.”



