விபச்சாரத்தை சட்டமாக்குவதை யாப்பில் வைத்துள்ள கட்சியை எவ்வாறு முஸ்லிம்கள் ஆதரிப்பது ?
விபச்சாரத்தை சட்டமாக்குவதை யாப்பில் வைத்துள்ள கட்சியை எவ்வாறு முஸ்லிம்கள் ஆதரிப்பது ; மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார் கேள்வி எழுப்பினார்.
உடுனுவர பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட்ட அவர்,
நாம் முஸ்லிம்கள். எமது தீர்மானங்கள் இஸ்லாமிய வழிகாட்டல்களை அடிப்படையாக கொண்டதாகவே அமைதல் வேண்டும். இதனை எந்த ஈமான் கொண்ட முஸ்லிமும் மறுதலிக்க முடியாது. எம்மவர்களில் ஒரு சிலர் சில சில்லறை பேச்சுக்களை நம்பி, மோலோட்டமான சிந்தனையில் அநுர தலைமையிலான தே.ம.சக்தியை ஆதரிப்பதாக தோன்றுகிறது. தே.ம.சக்தியின் கட்சி யாப்பில் விபச்சாரத்தை சட்டமாக்குவது எனும் விடயம் காணப்படுகிறது என நாம் கூறவில்லை தேசிய மக்கள் சக்தி கட்சி உயர்பீட உறுப்பினரான பிமல் ரத்னாயகவின் மனைவி கூறுகிறார்.
விபச்சாரம் என்பது இஸ்லாத்தில் நேரடியாக தடுக்கப்பட்ட ஒரு விடயம். இதில் யாருக்கும், எந்தவிதமான சிறு சந்தேகமும் இருக்க முடியாது. அப்படி தெளிவான ஒன்று. ஒருவர் ஒரு கட்சியை ஆதரிக்கின்றார் என்றால், அக் கட்சியினுடைய யாப்பையும் ஏற்கின்றார் என்றே பொருள்படும். யாரெல்லாம் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கின்றார்களோ, அவர்கள் எல்லாம் விபச்சாரம் சட்டபூர்வமாவதை ஏற்கின்றனர் என்றே கொள்ளவேண்டும்.
ஒரு முஸ்லிம் விபச்சாரத்தை ஏற்க முடியுமா. நிச்சயம் ஒரு முஸ்லிம் விபச்சாரத்தை வெறுப்பவனாகவே இருப்பான் என அடித்து கூறலாம். நாம் விபச்சாரத்தை வெறுத்தால், தே.ம.சக்தியையும் வெறுக்க வேண்டும். நாம் அநுரவை ஆட்சிக்கு கொண்டு வந்து, நாளை தே.ம.சக்தி விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கினால், அதற்கு தே.ம.சக்திக்கு வாக்களித்த ஒவ்வொருவரும் பொறுப்பு கூற வேண்டும். இந்த பாவத்தை எம்மால் சுமக்க முடியுமா.
நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மிக பெறுமதியானது. எமது வாக்கு ஒருபோதும் விபச்சாரத்தை ஊக்குவிக்கும் தே.ம.சக்தி சென்று விட கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.