News

அரசாங்கம் மீதான மக்கள் அங்கீகாரம் 62 சதவீதத்திலிருந்து 65 சதவீதம் வரை அதிகரிப்பு ..!

வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனத்தின் சுட்டிக்காட்டலின்படி, தற்போது இலங்கையில் சாதகமான மனப்பாங்குகள் அதிகரித்துள்ளன.

அரசாங்கத்தின் மீது உயர்வான அங்கீகாரம் நிலவுவதுடன், அந்த நிறுவனம் மேற்கொண்ட “நாட்டின் போக்கு” (Deshamanya – ‘රට හිතන හැටි’) கருத்துக்கணிப்பின்படி,

கடந்த நான்கு வருட கால கருத்துக்கணிப்பு வரலாற்றில் பொருளாதார நம்பிக்கை குறியீடு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது. இது நேர் (+) 14 இலிருந்து நேர் (+) 36 வரை அதிகரித்துள்ளது.

அரசாங்கம் மீதான மக்கள் அங்கீகாரம் 62 சதவீதத்திலிருந்து 65 சதவீதம் வரை வளர்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பரவியுள்ள தனித்தனி குடும்ப அலகுகளைச் சேர்ந்த 1,048 இலங்கையர்களை உள்ளடக்கிய, சீரற்ற முறையில் தெரிவு செய்யப்பட்ட (Random Selection) பல படிநிலை மாதிரியைக் கொண்டு இந்த புதிய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு 2026 ஜனவரி 24 முதல் பெப்ரவரி 3 வரையிலான காலப்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button