News

மன்னாரை சேர்ந்த இளைஞன் சஹ்ரீ, ஜிந்துப்பிட்டியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பாரதூரம் பற்றி
ஜனாதிபதியிடம் ரிஷாட் MP அவசர உரையாடல்

மன்னார் இளைஞர் கொழும்பு ஜிந்துப்பட்டியில் சுட்டுக் கொல்லப்பட்டதன் பாரதூரத்தை, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவசரமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இன்று (16) தொலைபேசியில் ஜனாதிபதியை தொடர்பு கொண்ட அவர்,

அப்பாவி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குறிவைத்து சுடப்படுவது, சிவில் சமூகத்தின் அன்றாட வாழ்வை அச்சுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இது குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்ததாவது:

சட்டவிரோத ஆயுதக் கும்பல் கள் சுதந்திரமாக உலவுவது, அப்பாவி சிவில் சமூகத்தை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

கொழும்பு ஜிந்துப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மன்னார் வெள்ளிமலையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சஹ்ரீ மரணமடைந்தார்.இத் துயரம் அப்பாவிகளுக்கு விழுந்த பாரிய இடி. தமது ஜீவனோபாயத்திற்காக கொழும்பில் பணிபுரிந்துவந்த இவ்விளைஞன், விடுமுறைக்காக வீடு திரும்புவதற்கு சலூனுக்கு சென்றிருந்தார். இந்தத் தருணத்திலே இவர் சுடப்பட்டார்.

இந்தக் கொலைக்குப் பின்னால் உள்ளவர்களை, அவசரமாக கைது செய்து சட்டத்தின் பிடியில் நிறுத்துங்கள். நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங் கள் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். பாதுகாப்புத்துறையை இவ்விடயத்தில் தீவிர கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துங்கள்.

பாதளக் கோஷ்டியை ஒழிப்பதற்கும் போதைப் பாவனைகளை அழிப்பதற்கும் தீவிரமாக செயல்படும் அரசாங்கம், அப்பாவிகளின் உயிர்களை பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பில் தேவையான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இதன் போது ஜனாதிபதி உறுதியளித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button