திலித் ஜயவீரவின் சர்வஜன இஹ்வான் ஒன்றியம் ஆரம்பம்

சர்வஜன கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர அவர்களின் தலைமையில் சர்வஜன இஹ்வான் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
இலங்கையர்கள் அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து, எமது நாட்டை வளமான, அபிவிருத்தியடைந்த மற்றும் மகிழ்ச்சியான தேசமாக உலகிற்கு எடுத்துச் செல்லும் பயணத்திற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதே சர்வஜன බලය கட்சியின் பிரதான நோக்கமாகும்.
சர்வஜன බලය கட்சியின் அரசியல் தரிசனம் எப்போதும் எமது தாய்நாட்டை முன்னிலைப்படுத்தியே செயற்படுகின்றது.
• நாங்கள் இலங்கை தேசியத்தை நம்புகிறோம்.
• தாய்நாட்டிற்காக நாம் அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது நேர்மையான நம்பிக்கையாகும்.
• நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், இலங்கை ஒரு ஒருபோதும் தோற்கடிக்க முடியாத தேசமாக மாறும் என்பதே எமது கொள்கை.
அரசியல் லாபங்களுக்காகச் சிலர் எங்களைப் பற்றி பல்வேறு பொய்யான கருத்துக்களையும், கட்டுக்கதைகளையும், அரசியல் சேறுபூசல்களையும் பரப்ப முயன்றாலும், எமது இந்த அடிப்படை நோக்கத்தில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கவில்லை.
அந்த உன்னதமான நோக்கத்திற்காக, சர்வஜன බලය கட்சி உருவாக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, முஸ்லிம் சகோதரர்கள் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
சர்வஜன இஹ்வான் ஒன்றியத்தின் ஊடாக, இந்த உன்னதமான நோக்கத்திற்காக நாம் இன்னும் பலமாகச் சகோதரர்களாக ஒன்றிணைந்து செயற்படுவோம். ஊடகப்பிரிவு



