News

சீகிரியா வீதியில் மனைவியுடன் நடந்து சென்றுகொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியை யானை மிதித்துக் கொன்ற சோக சம்பவம் பதிவு

சீகிரியா, பிதுரங்கல வீதியில் காட்டு யானை ஒன்று தாக்கியதில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 68 வயதுடைய ஹங்கேரி நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரும் அவரது மனைவியும் சீகிரியா – பிதுரங்கல வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போதே, இந்தக் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button