News

26 போலி உறுதிகளை தயாரித்து 3 ஏக்கருக்கும் அதிக காணியை விற்பனை செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற வேட்பாளர், சட்டத்தரணி அலெக்ஸ் நிஷாந்த பெர்னாண்டோ உள்ளிட்ட இருவருக்கு தலா 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது

26 போலி உறுதிப்பத்திரங்களை தயாரித்து மூன்று ஏக்கருக்கும் அதிகமான காணிப்பரப்பை விற்பனை செய்து பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளரான சட்டத்தரணி அலெக்ஸ் நிஷாந்த பெர்னாண்டோ உள்ளிட்ட இருவருக்கு சிலாபம் மேல் நீதிமன்றத்தினால் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


வழக்கு விசாரணையின் முடிவில், பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்மானித்துள்ளார்.


வழக்கு விசாரணையின் போது தெரியவந்ததற்கமைய, பிரதிவாதிகள் குறித்த காணிக்கு உரிமை கோருவதற்காக 26 போலி ஆவணங்கள் மற்றும் உறுதிப்பத்திரங்களைத் தயாரித்துள்ளதுடன், பின்னர் அந்த போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பல கோடி ரூபாய் பெறுமதியான சுமார் மூன்று ஏக்கர் காணியை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து பண மோசடி செய்துள்ளனர்.


சட்டத்தரணியாகப் பணியாற்றி, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்த மோசடியை முன்னெடுத்தமை தொடர்பில் நீதிமன்றம் கடும் அவதானம் செலுத்தியுள்ளதுடன், சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக பிரதிவாதிகளுக்கு அபராதமும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.


அலெக்ஸ் நிஷாந்த பெர்னாண்டோ என்பவர் 2024 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஒரு வேட்பாளராவார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button