News

M P ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் கொடுப்பனவுகளாகக் கிடைக்கின்ற தொகைகள் விபரம் வெளியிடப்பட்டது

By : மப்ரூக் UL

MP ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை கொடுப்பனவுகளாகக் கிடைக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?

பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று அதனை – நாடாளுமன்றில் தெரியப்படுத்தியிருக்கிறார்.

கணக்கை பார்போம் வாருங்கள்;
– சம்பளம் – 54,285/=
– பொழுது போக்கு கொடுப்பனவு – 1000/=
– சாரதிக் கொடுப்பனவு – 3500/= (அல்லது சாரதி வழங்கப்படுவார்).
– தொலைபேசிக் கொடுப்பனவு – 50,000/=
– போக்குவரத்து – 15,000/=
– அலுவலக கொடுப்பனவு – 100,000/=
– சபை அமர்வு ஒன்றுக்கு – 2500/=
– அமர்வு இல்லாத நாளில் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டால் – 2500/=
– எரிபொருள் கொடுப்பனவு – தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவருக்கு 419.76 லீட்டர் டீசல் கிடைக்கிறது.

தற்போது டீசல் 01 லிட்டர் 277 ரூபாய். அதன்படி 419.76 லீட்டர் டீசலுக்கான தொகை 116273.52 சதம் வருகிறது.

இந்தத் தொகையை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான தொகை என்று உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

மேலும், ஒவ்வொரு மாதமும் நான்கு நாட்கள் அமர்வுகள் நடைபெறுகின்றன என்றும் எடுத்துக் கொள்வோம்.

இப்போது எல்லாவற்றையும் கூட்டினால்,
349785 ரூபாய் வருகிறது.

கணக்கு இன்னும் முடியவில்லை.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் Research Officer, சாரதி, டைபிஸ்ற் உட்பட 05 உதவியாளர்கள் வழங்கப்படுகின்றனர். இவர்களில் சாரதியை அரசாங்கம் வழங்கி விடுகிறது. அல்லது தமக்குத் தேவையான அரச சாரதியொருவரை, வேறு திணைக்களத்திலிருந்து இடமாற்றி – MPமார் பெற்றுக் கொள்கின்றனர்.

மிகுதியாக உள்ள 04 உதவியாளர் பதவிக்கும், தமது மனைவி, மகன், மகள் என – குடும்பத்தினரைத்தான் அநேகமான MPகள் நியமித்துக் கொள்கின்றனர்.

இதன்படி பார்த்தால், ஒரு உதவியாளருக்கு ஆகக்குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தாலும் 02 லட்சம் ரூபாய் மொத்தமாகக் கிடைக்கும்.

ஆக மொத்தம் 549785 ரூபாய், ‘ட்ரவுன்ட் பிகராக’ச் சொன்னால், ஐந்தரை லட்சம் ரூபாயை – ஒவ்வொரு எம்.பியும் மாதாந்தம் சுளையாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்தத் தொகையானது, சாதாரண ஒரு அரச பணியாளரின் சம்பளத்தை விடவும் 10 மடங்கை விடவும் அதிகமானது என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

#parliament #MP #srilanka #ulmabrook

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button