News

சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை. நுகர்வோரை ஏமாற்ற வேண்டாம்.

நாட்டில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

நுகர்வோர் சார்பாக இதற்கு விரைவில் தீர்வை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க:

“லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மேலதிகமாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மேலும் கப்பல்கள் வரவுள்ளன.

உடனடியாக எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்குமாறு லாஃப்ஸ் நிறுவனத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்களிடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலால் கேள்வி (Demand) அதிகரித்துள்ளது. இதுவே இங்கு நடந்துள்ளது. சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை. நுகர்வோரை ஏமாற்ற வேண்டாம். விரைவில் எரிவாயுவை கொண்டு வந்து விநியோகியுங்கள். இந்த பிரச்சினை மஞ்சள் நிற எரிவாயுவை (Laugfs) பயன்படுத்துபவர்களுக்கே ஏற்பட்டுள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகளை உருவாக்கும் ஒரு குழுவினர் உள்ளனர். எக்காரணம் கொண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க மாட்டோம்.”

Recent Articles

Back to top button