புனித ரமழான் ‘ஸதகதுல் ஈத்’ செயற்றிட்டம் – கல்முனையன்ஸ் போரம் ஏற்பாட்டில் மற்றுமொரு மகத்தான வேலைத்திட்டம்

புனித ரமழான் மாதம் நம்மை அடைந்து விட்டது அல்ஹம்துலில்லாஹ் எமது அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்படும் ‘ஸதகதுல் ஈத்’ செயற்றிட்டத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வறுமையின் பிடியில் சிக்கி, நோன்புப் பெருநாளைக் கொண்டாட வழியின்றித் தவிக்கும் எமது சகோதரக் குடும்பங்களின் முகங்களில் புன்னகையை வரவழைப்பதே இத்திட்டத்தின் உன்னத நோக்கமாகும்.
*நீங்கள் எவ்வாறு பங்களிக்கலாம்?*
இந்த செயற்றிட்டதில் நீங்கள் மாத்திரமன்றி, உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் இணைத்துக்கொள்வதன் மூலம் நன்மைகளைப் பெருக்கிக் கொள்ளலாம். அதற்காக எமது அமைப்பினால் வழங்கப்படும் உண்டியல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தேவையான உண்டியல்களின் எண்ணிக்கையை எமக்குத் தெரியப்படுத்தினால், இன்ஷா அல்லாஹ், அவை உங்கள் இல்லத்திற்கே கொண்டு வந்து சேர்க்கப்படும்.
நீங்கள் அதிகப்படியான உண்டியல்களைப் பெற்று உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கையளிப்பதன் மூலம், இம்முறை அதிகப்படியான ஏழைக் குடும்பங்களின் பெருநாள்க் கனவுகளை எம்மால் நனவாக்க முடியும்.
முடியுமான அங்கத்தவர்கள் நிதியாகவும் பங்களிப்பு செய்ய முடியும்.
மேலதிக விபரங்களுக்கு அல்லது உண்டியல்களைப் பெற்றுக்கொள்ள எம்மைத் தொடர்பு கொள்ளவும். 0771235758
தகவல் :
பஸ்மி காஸிம்..



