News

2015 தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோற்காமல் இருந்திருந்தால், இன்று எமது இளைஞர்கள் டொலர்களில் சம்பளம் பெற்றுக்கொண்டிருப்பார்கள் ; திஸ்ஸ குட்டி

தற்போதைய அரசாங்கம் வெறுப்பையும் குரோதத்தையும் பரப்பி ஆட்சிக்கு வந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


இன்று (20) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அழைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.


தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், உலகத்துடன் போட்டியிடும் வகையில் முன்னோக்கிச் செல்வதற்கு முதலீடு செய்யக்கூடிய ஒரு முதலீட்டாளர் கூட வரவில்லை எனவும், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் கூட ஆரம்பிக்கப்படவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.


“தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க போர்ட் சிட்டி (Port City) குறித்துக் கொண்டுள்ள கருத்து என்ன?

மஹிந்த அவர்கள் 2015 இல் தோற்கடிக்கப்படாமல் இருந்திருந்தால், இன்று அந்த போர்ட் சிட்டி கட்டியெழுப்பப்பட்டு, இலங்கை இளைஞர் சமூகம் டொலர்களில் சம்பளம் பெறும் இடமாக அது மாறியிருக்கும். இன்று போர்ட் சிட்டிக்கு இவர்கள் என்ன செய்கிறார்கள்?” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button