News

பொய்களை கூறும் எதிர்க்கட்சியினர் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளனர் !

பொய்களையும் தேவையற்ற குழப்பங்களையும் ஏற்படுத்தும் எதிர்க்கட்சியினர் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளனர் – கோப் குழுத்தலைவர் நிஷாந்த சமரவீர

பொய்களையும் தேவையற்ற குழப்பங்களையும் ஏற்படுத்தும் எதிர்க்கட்சியினர், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பதாக கோப் (COPE) குழுவின் தலைவரும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (20ஆம் திகதி) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

• நாடாளுமன்றத்திற்கு வந்து கூச்சலிடும் எதிர்க்கட்சியினர், அன்று காலை பொல்துவ சந்தியில் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

• நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்த 40க்கும் மேற்பட்டோர் இருந்தபோதிலும், குறித்த போராட்டத்தில் சுமார் 14 பேர் மாத்திரமே கலந்துகொண்டனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

Recent Articles

Back to top button