ஹபுகஸ்தலாவை அல்ஹாமிதிய்யா அரபுக் கல்லூரியின் 13 ஆவது பட்டமளிப்பு மற்றும் வெள்ளி விழா

அல்ஹாமிதிய்யா அரபுக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா மற்றும் 25 ஆண்டு நிறைவு வெள்ளி விழா கல்லூரியின் தலைவர் அஷ்ஷேய்க் M.J. அப்துல் ஹாலிக் ஹழ்ரத் அவர்களினுடைய தலைமையிலும் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் M.I.M.இர்ஷாத் (ஹக்கானி) ஹழ்ரத் அவர்களினுடைய நெறிப்படுத்தலிலும் கடந்த 15.02.2026 (ஞாயிற்றுக் கிழமை) அன்று அல்ஹாமிதிய்யா பிரதான மண்டபத்தில் வெகு விமர்சையாக நடந்தேறியது.
இவ்விழாவில் பல ஆண்டுகள் இஸ்லாமியக் கல்வியைப் பயின்ற 13 மாணவர்கள் அல்-ஆலிம் பட்டம் பெற்றதுடன், திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த 05 ஹாபிழ்களும் கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரி தனது 25 ஆண்டுக் கல்விச் சேவையின் பயணத்தில் இதுவரை மொத்தம் 89 ஆலிம்களையும் 140 ஹாபிழ்களையும் சமுதாயத்திற்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
இந்நிகழ்வு அந்த கல்விப் பயணத்தின் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக நமது அயல் நாடு இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் மௌலானா சதீதுத்தீன் பாஸில் பாகவி ( முதல்வர் – அல்ஹிதாயா அரபுக் கல்லூரி – சென்னை ) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், மார்க்கக் கல்வியின் அவசியம், சமுதாய முன்னேற்றத்தில் உலமாக்களின் பங்கு மற்றும் இளைஞர்களின் ஒழுக்க வளர்ச்சி குறித்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் அன்றைய நிகழ்வின் விஷேட அதிதியாக கண்டி , தஸ்கர அல்ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் M.H.M.லபீர் (முர்ஸி) ஹழ்ரத் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் கல்வி மற்றும் ஒழுக்கத் திறன்களில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதுடன் அல்ஹாமிதிய்யாவின் #லிவாஉல் #ஹம்த் எனும் இதழின் இரண்டாம் வெளியீடும் வெளியிடப்பட்டது.
லிவாஉல் ஹம்த் இதழை அகுரனை ஜாமிஆ ரஹ்மானிய்யா நூலக பொறுப்பாசிரியர் அஷ்ஷேய்க் M.ரமழான் மர்ஸூக் ( ரஹ்மானி) ஹழ்ரத் அவர்கள் விமர்சித்தார்கள்.
கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், நலன்புரியாளர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பால் இந்நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இறுதியில், பட்டம் பெற்ற மாணவர்கள் அறிவும் நல்லொழுக்கமும் நிறைந்த சமூக சேவையை ஆற்ற அஷ்ஷேய்க் லபீர் (முர்ஸி) ஹழ்ரத் அவர்களால் உருக்கமான ஒரு துஆப் பிரார்த்தனையும் செய்யப்பட்டது.








