News

தங்களை விடவும் அறிவு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பவர்கள் மீது பொறாமை – இது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியின் முடிவிற்கான ஆரம்பமாக அமையலாம் ; ஹரின் பெர்னாண்டோ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாகவும், அதற்கான அழைப்பிதழ் தன்னிடம் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.



ஐக்கிய தேசிய கட்சியின்; அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



பல லட்சம் ரூபாய்களைச் செலவழித்து இந்த வழக்குக்காகத் தகவல்களைத் தேடியவர்களுக்கு, இவ்வளவு தெளிவான இந்த அழைப்பிதழ் கிடைக்காமல் போனது பெரும் ஆச்சரியத்திற்குரிய விடயமாகும்.



இலங்கையில் உள்ளவர்கள் ஏன் இந்த ஒரு விடயத்தைப் பிடித்துக்கொண்டு இவ்வளவு தூரம் அலைகிறார்கள் என்று தெரியவில்லை.



தங்களை விடவும் அறிவு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பவர்கள் மீதுள்ள பொறாமையாலேயே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.



சிஐடி போன்ற நிறுவனங்களை ஏமாற்றுவது போல இலண்டன் பல்கலைக்கழகத்தை எவராலும் ஏமாற்ற முடியாது.



அந்த நிறுவனம் யாருடைய விருப்பத்திற்கும் ஏற்றவாறு வாக்குமூலங்களை வழங்காது.



தற்போதைய அரசாங்கம் தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாகவும், இது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியின் முடிவிற்கான ஆரம்பமாக அமையலாம் என்றும் ஹரின் பெர்னாண்டோ எச்சரித்தார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button