News

தெரன திலித் ஜயவீரவும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் இணைந்து ஊழல்கள், கட்டண அதிகரிப்புகளுக்கு எதிராக மக்களை அணித்திரட்ட போவதாக அறிவிப்பு

தரமற்ற நிலக்கரி கொள்முதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், அது தொடர்பில் மக்கள் மத்தியில் கருத்தாடலை ஏற்படுத்தல் தொடர்பில் சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீரவுக்கும் ஐக்கிய குடியரசு முன்னணித் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்குமிடையில் பரந்துப்பட்ட பேச்சுவார்த்தையொன்று நேற்று (23) கொழும்பில் இடம்பெற்றது.



இந்தச் சந்திப்பு தொடர்பில், சர்வஜன அதிகாரத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர,



‘‘நிலக்கரி கொள்முதல் தொடர்பில் கவனம் செலுத்திய சந்தர்ப்பத்திலிருந்து மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டோம். இதில் ஊழல் இருக்கிறது என்பதை கவனத்திற்கொண்டுள்ளோம். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திலிருந்து எதிர்த்தரப்பு எம்.பிக்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு இந்தத் துறையில் பாரிய அனுபவம் இருக்கிறது. அவரிடமிருக்கும் தரவுகள் எங்களுக்கு பெறுமதி மிக்கவை.



இவர்கள் ஊழலுக்கு மேல் ஊழல் செய்வார்கள் என்பதை தேர்தல் காலத்திலேயே நாங்கள் கூறியிருந்தோம். மக்கள் விடுதலை முன்னணி அடிமட்டத்திலிருந்தே ஊழல் நிறைந்த கட்சி. எனவே, இந்த அரசாங்கத்தினூடாக இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களுக்கு எதிராக மக்களை அணித்திரட்டுவோம்’’ என்றார்.



பாட்டலி சம்பிக்க ரணவிக்க குறிப்பிடுகையில்,



‘‘தரமற்ற நிலக்கரி கொள்முதலினால் ஏற்பட்ட நிலைமை குறித்து கடந்த 18ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்த விடயங்களை சர்வஜன அதிகாரத்தின் தலைவர் உள்ளிட்ட தரப்பினருக்கு சமர்ப்பித்திருக்கிறோம். அவர்களும் அதுதொடர்பில் அறிந்து வைத்திருக்கிறார்கள்.



எனவே, எதிர்காலத்தில் மின் நுகர்வோருடன் இணைந்து கட்சி நிற பேதமின்றி ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடி வருகிறோம். கடந்த காலங்களில் ஊழல் இருந்தது, சம்பந்தப்பட்ட தலைவர்களின் மகன்களின் நிறுவனங்களிலிருந்தே கொள்முதல் செய்தோம் என்று குற்றச்சாட்டுகளை முன்வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இருந்தபோதும் 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொள்முதல் செயற்பாடுகளை எடுத்துக்கொண்டால் திரிபுபடுத்தி தமக்கு தேவையான வகையில் மின்சக்தி அமைச்சரும் அந்த அமைச்சும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கமும் செயற்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது.



ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து மின் கட்டணத்தை அதிகரித்து இதன் சுமையை மக்கள் மீது திணிக்க முயற்சிக்கிறார்கள் என்றால் அதற்கெதிராக இந்த நாட்டிலுள்ள மின் நுகர்வோரை ஒன்றுத்திரட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்றார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button