News

யாசகம் கேட்ட பலஸ்தீனப் பெண்ணை விசாரணை செய்த பொலீசாருடன் முறுகல் ;9 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் !

கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் யாசகம் கேட்ட பலஸ்தீனப் பெண்னை விசாரிக்க முற்பட்ட பொலீசாருடன் முருகலில் ஈடுபட்டதாக 9 சந்தேக நபர்களை புறக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

23.02.2026 நேற்றைய தினம் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு தாயும் இரண்டு குழந்தைகளும் இரண்டாம் குறுக்குத் தெருவில் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த போது அங்கு வந்துள்ள கொழும்பு புறக்கோட்டை போலிசார் அவர்களை விசாரிக்க முற்பட்டுள்ளனர். அதன் போது அங்கிருந்த பொது மக்களில் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை அங்கு பொலிசாருக்கும் பொதுமக்களில் சிலரிடையே இடையில் முருகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனை அடுத்து அந்தப் பெண்ணும் இரு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.அங்கிருந்து சென்ற பொலிஸார் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து தங்களுடைய கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி சுமார் 30 நபர்களை கைது செய்து புறக்கோட்டை போலீசிற்கு அழைத்து சென்று சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்னர் 23 நபர்களை விடுதலை செய்துள்ளனர்.கைது செய்ய்யப்பட்ட 7 பேருடன் பொலிசில் சரணடைந்த இரண்டு சந்தேக நபர்களுடன் சேர்த்து மொத்த 09 பேரை இன்று கொழும்பு நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர்களிக் நான்கு பேரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரையும் ,மீதி 5 பேரை எதிர்வரும் 11ம் தேதி வரையிலும் விளக்கம் மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button