News
சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக சௌதி அறிவிப்பு ..

ராஸ் தனுரா (Ras Tanura) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று காலை “தாக்க முயன்ற” இரண்டு ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரசு நடத்தும் SPA செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் முயற்சியை முறியடிக்கும் போது, ட்ரோன்களின் சிதறல்கள் விழுந்ததில் ஒரு “சிறிய” தீ விபத்து ஏற்பட்டதாகவும், இருப்பினும் இதில் பொதுமக்கள் எவருக்கும் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.



