News
ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில் ராஜினாமா ! சஜித் பக்கம் தாவினார்.
ஊவா மாகாண ஆளுநர் திரு.ஏ.ஜே.எம்.முஸம்மில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளார்.
இந்த தீர்மானத்தை ஊவா மாகாண ஆளுநர் இன்று (05) பிற்பகல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்துடன் முஸம்மில் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக. உத்தியோகபூர்வமாக தெரிவித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.