News
“நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்” – ஐக்கிய அரபு அமீரக அதிபரிடம் இலங்கை ஜனாதிபதி உறுதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் தனது வருத்தத்தைத் தெரிவிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சையத் அவர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியதாக இலங்கை ஜனாதிபதி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அனைத்து வகையான வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் கண்டிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு இலங்கையின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தாம் உறுதியளித்ததாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை எப்போதும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் உறுதியாக நிற்பதுடன், சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தனது X தளத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.



