News

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: இருவர் காயம்

வியாழக்கிழமை அசர்பைஜானின் நக்கிவன் (Nakhchivan) பகுதியில் உள்ள ராசி (Razi) விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது இருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் யூரோநியூஸ் (Euronews) செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளனர்.

அசர்பைஜான் அதிகாரிகளின் அறிக்கையின்படி, ஒரு ட்ரோன் விமான நிலைய முனையக் கட்டிடத்தைத் தாக்கியுள்ளது, மற்றொரு ட்ரோன் ஷகராபாத் (Shakarabad) கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் விழுந்துள்ளது.

அசர்பைஜான் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

“ஈரான் இஸ்லாமியக் குடியரசின் எல்லைக்குள் இருந்து ஏவப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இத்தாக்குதலால் விமான நிலையக் கட்டிடம் சேதமடைந்துள்ளதுடன், இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.”

சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட வீடியோக்களில், ட்ரோன் ஒன்று விமான நிலையத்தை நோக்கிப் பறப்பதையும், அதன் பிரதான முனையம் சேதமடைந்திருப்பதையும், அவசரக்கால மீட்புக்குழுவினர் அங்கு விரைந்துள்ளதையும் காணமுடிகிறது.

Recent Articles

Back to top button