News

இஸ்ரேலிய பத்திரிகையாளர் அலோன் மிஸ்ராஹூ எழுதிய பதிவின் தமிழாக்கம்

இஸ்ரேலிய பத்திரிகையாளர் அலோன் மிஸ்ராஹூ எழுதிய பதிவின் தமிழாக்கம் : by தில்ஷான் முகம்மத்
“நாம் வரலாற்றைக் காண்கிறோம். உலகமே எதிர்பாராத வகையில், ஈரான் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது மிகவும் தீவிரமாகவும், விரிவாகவும் தாக்கி வருகிறது; உலகம் இதை புரிந்து கொள்ளவே இன்னும் தயார் நிலையில் இல்லை.


நான்கு நாட்களுக்குள், ஈரான் பிராந்தியத்தில் தனது இராணுவ ஆதிக்கத்தின் பரப்பை விரிவுபடுத்தியுள்ளது. உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த மற்றும் முக்கியமான இராணுவத் தளங்கள், உபகரணங்கள் மற்றும் சொத்துக்களை ஈரான் அழித்துவிட்டது. பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் உலகிலேயே மிகப்பெரிய இராணுவ அமைப்புகளில் சில.
பல தசாப்தங்களாக டிரில்லியன் டாலர்கள் செலவழித்து உருவாக்கப்பட்ட இந்த சொத்துக்கள் சில நாட்களில் அழிவடைந்துவிட்டது.


நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ரேடார்கள் ஒரு கணத்தில் அழிக்கப்பட்டும், முழு இராணுவத் தளங்களே கைவிடப்பட்டு எரிந்து நாசமாகியுள்ளது.
எனது அறிவின் அடிப்படையில் சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்கா தனது முழு வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய சேதத்தை சந்தித்ததில்லை; ஒருவேளை பேர்ல் ஹார்பர் தாக்குதல் போன்ற ஒரு சம்பவத்தைத் தவிர.


ஒரு சாதாரண போரில் அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக எந்த எதிரியும் இவ்வாறு சேதத்தை ஏற்படுத்தியதில்லை. இது நம்ப முடியாத ஒன்று. இந்தப் போரின் உண்மையான நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், தகவல் தணிக்கை காரணமாக புதிய தகவல்கள் வெளிவராமல் தடுக்கப்படுகின்றன. நீங்கள் கவனித்திருந்தால், இந்தப் போரைக் குறித்து வெளிவரும் தகவல்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.


முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த முதல் ஈராக் போரின் போது, ஈராக் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் வீடியோக்கள் தொடர்ந்து காட்டப்பட்டன. அப்போது ‘ஸ்மார்ட் குண்டுகள்’ மற்றும் கேமரா காட்சிகள் புதியதாக இருந்தாலும், ஒவ்வொரு இரவும் இரவு காட்சிகள் காட்டப்பட்டன. ஆனால் இப்போது இந்தப் போரின் வீடியோக்களை நாம் மிகவும் குறைவாகவே பார்க்கிறோம்.


இதைக் கவனியுங்கள்! உலகிலேயே மிகப்பெரிய இராணுவ சக்தியும், மிகப்பெரிய வான்படை திறனும் கொண்டதாகக் கூறப்படும் அமெரிக்கா, நான்கு நாட்களாக தாக்குதலில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், ஈரானின் வான்வெளியை அமெரிக்கா கட்டுப்பாட்டில் எடுத்ததற்கான எந்த ஆதாரங்களும் நாம் பார்க்கவில்லை. தெஹ்ரான் அல்லது ஈரானின் வேறு எந்த பகுதியின் மேல் பறக்கும் அமெரிக்க விமானங்களின் காட்சிகள் எங்கே?


அமெரிக்க படைவீரர்கள் ஈரான் நிலத்தில் காலடி வைப்பதே (Boots on the ground) கனவாகிவிட்டது. இந்தப் போரின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நான்காவது நாளிலேயே டிரம்ப் நிர்வாகத்திலிருந்து வரும் விசித்திரமான ஆலோசனைகளைப் பாருங்கள்.


பாரசீக வளைகுடாவில் இருந்து வரும் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்க இராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான ஈரான் ஏவுகணைகள் அடையும் தூரத்தில் அமெரிக்க கப்பல்களை அனுப்பப் போகிறீர்களா? ஹோர்முஸ் நீரிணை வழியாக இப்போது யாரும் செல்ல முடியாது.
ஈரான் பல தசாப்தங்களாக இதற்காக தயாராகி வந்துள்ளது. ஈரானை தாக்க குர்திஷ் ஆயுதப்படைகளை ஆயுதப்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள். நீங்கள் ஈரானின் வரைபடத்தை பார்த்திருக்கிறீர்களா? அது எவ்வளவு பெரிய நாடு என்பது தெரியுமா? 10,000 பேர் கொண்ட படையா அல்லது 50,000 அல்லது 100,000 பேர் கொண்ட படையா ஈரானை ஆக்கிரமிக்க முடியும்? ஈரான் அவற்றை முழுவதும் விழுங்கிவிடும்.


அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கனவே இந்தப் போரில் தோற்றுவிட்டதாக நான் நம்புகிறேன். அவர்கள் பொதுமக்களை கொல்லலாம், பெரிய குண்டுகளை வீசி கட்டிடங்களை அழிக்கலாம். ஆனால் இந்தப் போரில் வெற்றி பெற முடியாது. ஈரானின் இராணுவ அடுக்குகள் மற்றும் ஆயுத களஞ்சியங்கள் நாட்டின் பல இடங்களில் மிகவும் ஆழமான நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அமெரிக்காவோ, இஸ்ரேலோ எட்ட முடியாது.


அவர்கள் முடிவுக்கு கொண்டு வர முடியாத ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இந்தப் போர் முடிந்த பிறகு அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு மீண்டும் வர முடியாது. மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ இருப்பே இருக்காது என்று நான் உறுதியாகச் சொல்கிறேன்.”
*இவர் ஒரு இஸ்ரேலிய பத்திரிகையாளர் என்பதால் இதை பதிவிடுகிறேன் : தில்ஷான் முகம்மத்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button