News

எதிர்வரும் புதன் கிழமை 10,000 பௌத்த தேரர்களை கொழும்புக்கு அழைத்துவர தீர்மானம் ..

முன்னர் ஜே.வி.பி யாக இருந்த தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) மக்களின் பிரச்சினைகளை தேவையில்லாமல் பயன்படுத்தி அரசியல் விளையாடுகிறது என உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், NPP நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சினைகளை உருவாக்கி அதைவைத்து அரசியல் கொண்டுவருவதாகக் கூறினார்.

ஜே.வி.பி தவிர, கடந்த காலங்களில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பௌத்த மதத்தின் பாதுகாப்பை அரசியலமைப்பில் அங்கீகரித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

“எனவே,10,000 பௌத்த பிக்குகளை எதிர்வரும் புதன்கிழமை (11) கொழும்பு செல்ல தீர்மானித்துள்ளோம், அவர்கள் யாருக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.பௌத்தம் மற்றும் பிற மதங்களைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

NPP புதிய கட்சியல்ல என்று கூறிய அவர் முன்னாள் ஜே.வி.பி உறுப்பினர்கள் இப்போது வேறுபட்ட தோற்றத்துடன் NPP இன் அங்கம் வகிக்கின்றனர்.

NPPயை ஆட்சிக்குக் கொண்டுவருவது அனைத்து மதங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று அவர் எச்சரித்தார்.

Recent Articles

Back to top button