News

கடலில் சிக்கித் தவித்து நெருக்கடியை எதிர்கொண்ட ஈரானிய கப்பலுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய நடவடிக்கை எடுத்த ஜனாதிபதிக்கு சியாம் மகா நிகாயவின் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகா பீடங்களின் அனுநாயக்க தேரர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.



சியாம் மகா நிக்காயவின் மல்வத்த மகா விஹார பீடத்தின் உப பீடாதிபதி திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் மற்றும் அஸ்கிரிய மகா பீடத்தின் அனுநாயக்கர் நாரம்பனாவே ஆனந்த தேரர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மனிதாபிமான நடவடிக்கையைப் பாராட்டினர்.



இலங்கை கடல் எல்லைக்கு வந்த உதவியற்ற மற்றும் துயரத்தில் இருந்த மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்குவது பௌத்தர்கள் மற்றும் இலங்கை மக்களின் கருணை மற்றும் மனிதாபிமானத்தின் சிறந்த செயலாகும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.



(ஜே.எம்.ஹாபீஸ்)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button