News
எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்திய மூன்று தனியார் நிறுவனங்கள்

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யும் ஐ.ஓ.சி (IOC), சைனோபெக் (Sinopec) மற்றும் ஆர்.எம். பார்க் (RM Parks) ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கும் எரிபொருள் அளவைக் கட்டுப்படுத்தியுள்ளன.
முக்கிய விபரங்கள்:
• தினசரித் தேவைக்குத் தேவையான அளவு மாத்திரமே தற்போது விநியோகிக்கப்படுகிறது.
• மேலதிகக் கையிருப்பு (Buffer Stock) வழங்கப்படாததால், விநியோகத்தில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் எரிபொருள் நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.



