News

ஈரானின் ஆட்சி அதிகாரத்தை ஒரு சில நாட்களில் சீட்டுக்கட்டு போல வீழ்த்திவிடலாம் என ட்ரம்ப் தப்புக் கணக்குப் போட்டு, இப்போது விரக்தியில் முடிவுகளை எடுக்கும் ட்ரம்ப் – ஈரானுக்கு எதிரான போரினால் அமெரிக்காவிற்கு மேலும் ஆபத்துக்களும் காத்திருகின்றன

ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டுள்ள விரக்தியின் வெளிப்பாடே என சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் ரொபர்ட் பேப் தெரிவித்துள்ளார்.

அல்ஜெஸீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“ஈரானின் ஆட்சி அதிகாரத்தை ஒரு சில நாட்களில் சீட்டுக்கட்டு போல வீழ்த்திவிடலாம் என ட்ரம்ப் தப்புக் கணக்குப் போட்டார்.

ஆனால் ஈரானின் தலைமைத்துவம் வீழ்ச்சியடையாதது அவருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஆரம்பத்தில் சில தந்திரோபாய வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மூலோபாய ரீதியாக ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார்.

தற்போது 2,500 மரைன் படையினரை ஈரானுக்குள் களமிறக்கும் திட்டம் தந்திரோபாய ரீதியாக அமெரிக்காவிற்கு பெரும் இழப்பைத் தரும். ஏனெனில் அந்தப் படையினர் ஈரானின் கடும் தாக்குதல்களுக்கு இலக்காகும் அபாயம் உள்ளது.

அதேவேளை, கார்க் தீவு மீதான தாக்குதலால் சர்வதேச சந்தைக்கு வரும் எண்ணெயின் அளவு குறைந்து, விலையேற்றம் ஏற்படும்.

இது உலகப் பொருளாதாரத்திலும் பாரிய தாக்கத்தை செலுத்தும். எனவே, இந்த போர் நடவடிக்கை அமெரிக்காவிற்கு ஒரு வெற்றியாக அமையப்போவதில்லை,” என அவர் எச்சரித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button