News

பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் வரை தாக்குதல்கள் தொடரும்: ஈரான் IRGC எச்சரிக்கை

பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் முற்றாக அகற்றப்படும் வரை தமது பதில் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

“Operation True Promise 4” நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு கட்டங்களாக பாரிய தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது, ஐக்கிய அமெரிக்காவிற்குச் சொந்தமான “அல் தஃப்ரா” (Al Dhafra) விமானப்படைத் தளத்தின் தலைமையகத்தை இலக்காகக் கொண்டு அதிநவீன பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் மூலம் அமெரிக்க தளத்தின்:

• முன்னெச்சரிக்கை ரேடார் அமைப்புகள்

• கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள்

• படைவீரர்கள் தங்கியிருந்த இடங்கள்

ஆகியவற்றைத் துல்லியமாக இலக்கு வைத்து அழிக்க முடிந்ததாக IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னணி

கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி ஈரானின் உயரிய தலைவர் ஆயதுல்லா செய்யித் அலி கமேனி மற்றும் சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பதிலடியாகவே இந்த மோதல் நிலைமை தீவிரமடைந்தது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் சீயோனிச ஆட்சி (இஸ்ரேல்) ஈரானுக்கு எதிராக பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததுடன், ஈரானின் சிவில் மற்றும் இராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களால் உட்கட்டமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய கடற்படையின் கருத்துப்படி, பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற தன்மைக்கும் முஸ்லிம் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கும் இந்த அமெரிக்க தளங்களே பிரதான காரணமாகும். எனவே, பிராந்தியத்திலிருந்து அமெரிக்க அதிகாரம் முற்றாக துடைத்தெறியப்படும் வரை பின்வாங்கப் போவதில்லை எனவும், தொடர்ச்சியாகத் தாக்குதல்களை முன்னெடுக்கப் போவதாகவும் ஈரான் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Recent Articles

Back to top button