News
“வேறு அரசாங்கம் இருந்திருந்தால் இந்நேரம் எரிபொருள் வரிசைகள் உருவெடுத்திருக்கும்”

“வேறு அரசாங்கங்கள் இருந்திருந்தால் இந்நேரம் எரிபொருள் வரிசைகள் உருவெடுத்திருக்கும்” என ருவன் ரணசிங்க, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, தற்போதைய அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர் அத்தியாவசிய பொருட்களின் விலைகாலை பாரிய அளவில் குறைத்து மக்களுக்கு சலுகை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை மக்களுக்கு சீராக எரிபொருளை வழங்க தேவையாக முன்பதிவுகளை செய்துள்ளதாகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என அவர் கூறினார்.



