News

துரதிஸ்டவசமாக அனுர ஜனாதிபதியாகிவிட்டார் ! அவர் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் இது போன்ற நெருக்கடி நிலைமைகளுக்கு எப்படி முகம் கொடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுரை வழங்கியிருப்பார் !

துரதிஸ்டவசமாக அனுர ஜனாதிபதியாகிவிட்டார் எனவும் அவர் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் இது போன்ற நெருக்கடி நிலைமைகளுக்கு எப்படி முகம் கொடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுரை வழங்கியிருப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நெருக்கடி நிலைமைகளை கையால்வதில் இந்த அரசு தோல்வி கண்டுள்ளது என கூறிய அவர் இரண்டு மாதங்களுக்கு போதிய கையிருப்பு இருப்பதாக கூறிவிட்டு திடீரென கியூஆர் முறையை அறிமுகப்படுத்தியுள்ளதால் குழப்பமடைந்துள்ள மக்கள் எரிபொருள் வரிசைகளுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக யுத்த சூழல் ஏற்படுவது இது முதல் முறையல்ல என சுட்டிக்கட்டிய அவர் நாட்டில் உள்நாட்டு போர் இடம்பெற்ற போதும் 88/89 ஜேவிபி வன்முறைகள் இடம்பெற்ற போது நாட்டில் நிதி நெருக்கடிகள் விலைவாசி உயர்வு ஏற்படவில்லை என அவர் கூறினார்.

யுத்தம் ஆரம்பமானது பெப்ரவரி 28 என்றாலும் அமெரிக்க ஜனவரி மாதமே யுத்தத்திற்கு தங்களை தயார்படுத்தியதை நாம் அவதானித்தோம்.அதனை கருத்தில் கொண்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு சென்றிருந்தால் கியுஆர் முறைமையோ அல்லது விலை அதிகரிப்போ தேவையில்லை என கூறிய அவர் இதே கியூஆர் முறைமையை முன்னரே கொண்டு வந்திருந்தால் விலை அதிகரிப்பிற்கு சென்றிருக்க தேவையில்லை என கூறிய முஜிபுர் ரஹ்மான் தற்போது மக்கள் வரிசையில் நின்று அதிக விலைகொடுத்து எரிபொருள் கொள்வனவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

துரதிஸ்டவசமாக அனுர ஜனாதிபதியாகிவிட்டார் எனவும் அவர் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் இது போன்ற நெருக்கடி நிலைமைகளுக்கு எப்படி முகம் கொடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுரை வழங்கியிருப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button