News

ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டு வரை மட்டுமே எரிபொருள் உள்ளது.. அதன் பின்னர் கடும் சவாலை எதிர்நோக்க நேரிடும் .. – பிமல்”

எதிர்வரும் ஏப்ரல் மாத சித்திரை புத்தாண்டு வரை மட்டுமே நாட்டில் எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், அதன் பின்னர் நாடு பாரிய சவாலை எதிர்நோக்க நேரிடும் என்றும் திரு. பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உலகத் தலைவர்கள் சிலரின் முட்டாள்தனமான யுத்த வெறி காரணமாக முழு உலகமும் அழிந்து வருவதாகவும், அதன் தாக்கம் இலங்கையையும் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

உலகை ஆளும் சில தலைவர்களின் யுத்த வெறியினால் மனித உயிர்கள் அழிந்து வருவதுடன், மக்களின் வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகளும் தகர்ந்து போயுள்ளதாக திரு. ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். பூமியின் ஒரு சிறிய பகுதியான இலங்கையின் குடிமக்கள் என்ற ரீதியில், நாமும் இந்த மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் எரிபொருள் இருப்பு ஏப்ரல் மாத புத்தாண்டு வரை மட்டுமே இருக்கும் என ஜனாதிபதியும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்ததை நினைவு கூர்ந்த அவர், தற்போதைய உலகளாவிய யுத்த சூழல் தொடருமானால், அதன் பின்னர் எரிபொருள் தொடர்பில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button