நெதன்யாகு தேனீர் குடித்துக் கொண்டே பேசுவது போல் நேற்று வெளியிடப்பட்ட வீடியோ போலியானது என X இன் Grok Ai உறுதிப்படுத்தியது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தேனீர் குடித்துக் கொண்டே பேசுவது போல் வெளியிடப்பட்டுள்ள காணொளி போலியானது என்று எக்ஸ் தளத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் க்ரூக் கூறியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திவிட்டோம், இதில் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை, இறந்திருக்கலாம் என்று ஈரான் அறிவித்தது. ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
நெதன்யாகு உயிருடன் தான் இருக்கிறார், நலமாக உள்ளார் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தொடர்ந்து மறுத்து வருகின்றது. தமது மறுப்பை மெய்ப்பிக்கும் வகையில் கையில் தேனீர் அருந்தியபடியே பேசும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்றை இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.
அவர் உயிருடன் தான் உள்ளார் என்று இஸ்ரேல் அறிவித்து இருக்கும் நிலையில், அந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்து உலக நாடுகள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன. இந்நிலையில், இந்த காணொளி உண்மையானது தானா? என்று எக்ஸ் வலை தள பக்கத்தில் க்ரூக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த க்ரூக், நெதன்யாகு தேனீர் குடித்தபடி பேசும் காணொளி ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று அறிவித்துள்ளது.
இந்த வீடியோ ஏஐ-யால் உருவாக்கப்பட்டது. தேனீர் கடையில் வெகு சாதாரணமாக ஈரான், லெபனான் பற்றி பேசுவது ஒரு போலியான காணொளி ஆகும். இந்த வீடியோவில் உண்மையான நிகழ்வு இருப்பது போன்று தெரியவில்லை.என க்ரூக் தெரிவித்துள்ளது https://youtu.be/lrEoI5vtRCU?si=vQKs7EQuSb70aFGC

