News

எனக்கு வழங்கப்பட்டுள்ள 15 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டில்  யாழ்ப்பாணத்திலிருந்து வந்து பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதென்றால், அதற்குப் பல வாரங்கள் எடுக்கும் ; அர்ச்சுனா MP

தனக்கு வழங்கப்பட்டுள்ள 15 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை வைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதென்றால், அதற்குப் பல வாரங்கள் எடுக்கும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) அன்று நடைபெற்ற அமர்வின்போது இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

“யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வருவதற்கு எமக்கு வெறும் 15 லீட்டர் எரிபொருளே வழங்கப்பட்டுள்ளது. இந்த அளவை வைத்துக்கொண்டு நான் கொழும்பு வருவதென்றால், முதலில் அனுராதபுரம் வரை வந்து அங்கு தூங்க வேண்டும். பின்னர் அடுத்த வாரத்திற்கான ‘கியூ.ஆர்’ ஒதுக்கீடு கிடைக்கும் வரை காத்திருந்து, அதனைப் பெற்றுக்கொண்டே கொழும்பு வந்து சேர முடியும். இங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button