News
புதன்கிழமை விடுமுறை வழங்குமாறு தனியார் பாடசாலைகளிடம் கோரிக்கை ..

சர்வதேச பாடசாலைகள், தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், எரிசக்தியை சேமிப்பதற்கும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு இணங்கி செயற்படுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



