News
தரம் குறைந்த நிலக்கரி காரணமாக நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் ஏழு தடவைகள் செயலிழந்துள்ளது.

நிலக்கரி பிரச்சினை தொடர்பாக இன்றைய தினமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
தரம் குறைந்த நிலக்கரி காரணமாக நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் ஏழு, எட்டு தடவைகள் செயலிழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தரம் குறைந்த நிலக்கரி காரணமாக மின் உற்பத்தியில் பாரிய சிக்கல் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தரம் குறைந்த நிலக்கரி காரணமாக மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.



