அமெரிக்க உயர் அதிகாரிகள் இரகசியமாக இலங்கைக்கு வருகை தந்ததுள்ளது ஏன் ??

டொனால்ட் டிரம்பின் தெற்காசிய பிரதிநிதியும் இந்தியவுக்கான அமெரிக்க தூதுவருமான சேர்ஜியா கோ மற்றும் வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரும் தெற்காசியவுக்கான அமெரிக்க புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருக்கும் மைக்கல் ஜெர்மியா ஆகியோர் இலங்கைக்கு வந்துள்ளது ஏன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
யுத்தம் ஒன்று இடம்பெறும் சூழலில் இலங்கையின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்காவுடன் என்ன பேச்சுவார்த்தை இடம்பெற்றது என்பது தொடர்பில் அரசு பாராளுமன்றுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.
அமைச்சர் அனுர கருனாதிலக அவர்களோடு ஒப்பந்தம் செய்ய கலந்துரையாடிய விடயங்கள் என்ன என்பது என்பது தொடர்பில் அரசு பாராளுமன்றுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என எபாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.
இந்த நேரத்தில் எமக்கு பருப்பை கேட்டு தின்ன முடியாது என அவர் மேலும் கூறினார்.



