News

உள்ளாடைகளில் ஓட்டை உள்ள ஜே.வி.பியினருக்கு பெரிய அளவில் கட் அவுட்கள் செய்ய பணம் எங்கிருந்து வந்தது? என அமைச்சர் பிரசன்ன கேள்வி


⏩ தபால் வாக்குகளின் அதிகூடிய நன்மை ரணில் அவர்களுக்கே…

⏩ அரசாங்க ஊழியர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கியவர்  தற்போதைய ஜனாதிபதிதான்…

⏩ மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை…

⏩ ஐந்து பெரும் சக்திகளை ஒன்றிணைக்கக்கூடிய இடதுசாரி முகாம் எம்மிடமே உள்ளது…

⏩ ஜேவிபியின் உள்ளாடைகளில் ஓட்டை உள்ளவர்கள்  பெரிய அளவில் கட்அவுட்கள் செய்ய பணம் எங்கிருந்து வந்தது?

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மதகுரு, மருத்துவர், ஆசிரியர், விவசாயி மற்றும் தொழிலாளர் ஆகிய ஐந்து பெரும் சக்திகளை ஒன்று திரட்டக்கூடிய இடதுசாரி முகாம் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

“இயலும் ஸ்ரீலங்கா” பியகம தொகுதியின் பெண்கள் மாநாட்டில் இன்று (07) கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மகளிர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தெல்கொட டெமரிண்ட் விழா மண்டபத்தில் நடைபெற்றது.

பொருளாதார நெருக்கடியில் இருந்த ஒரு நாட்டில் தற்போது 07 பில்லியன் டொலர் கையிருப்பு இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

“இந்த நாடு இருந்த நிலையில் இருந்து எப்படி மீண்டது என்பது இந்த நாட்டின் அறிவார்ந்த மக்களுக்கு தெரியும். பொய் சொல்பவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை. எனவேதான் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். ரணில் விக்கிரமசிங்க தபால் மூல வாக்களிப்பில். அதிகூடிய  வெற்றி ரணிலுக்கே போகும். கடந்த காலங்களில் கோவிட் தொற்றுநோய் இருந்தது, பொருளாதார நெருக்கடி இருந்தது. ஆனால் நாங்கள் எந்த ஒரு அரச  ஊழியரையும் நீக்கவில்லை.மேலும் அரச ஊழியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க தேவையான பின்னணி உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில், எரிபொருள்மற்றும் எரிவாயு வாங்க 20 மில்லியன் டொலர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று 07 பில்லியன் டொலர்களை கையிருப்பாக உருவாக்க முடிந்ததால், அரச ஊழியர்களின் உதவித்தொகையை அதிகரிக்கவும், சம்பளத்தின் மீதான வரிகளை குறைக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தை சரியாக முகாமைத்துவம் செய்தார்.

நாம் இன்று இந்த நாட்டு மக்களுடன் ஒப்பந்தங்கள் செய்கின்றோம். இன்று ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்ய சில குழுக்கள் முன்வந்துள்ளன. நாங்கள் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் இடத்திற்கு செல்ல வேண்டும். தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டது. மதகுருமார், வைத்தியர், ஆசிரியர், விவசாயி, தொழிலாளர் ஆகிய ஐந்து பெரும் சக்திகளை ஒன்று திரட்டக்கூடிய இடதுசாரி முகாமைச் சுற்றி நாங்கள் ஒன்றுகூடுகிறோம்.

88/89 காலப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி செய்த அதே அழிவை 2022 இலும் செய்திருக்கிறது. இவ்வளவு செலவு செய்ய அவர்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது? உள்ளாடை ஓட்டை என்றால்  அதை வாங்க வசதியற்றவர்கள்  இதற்கு எப்படி  செலவு செய்வார்கள்? இன்று பெரிய அளவில் கட்அவுட்களை உருவாக்கி வருகின்றனர். புத்திசாலிகள் அதைப் பற்றி சிந்திக்கிறார்கள். மக்களை ஏமாற்ற முடியாது. மற்றவர்கள் வாக்குறுதிகளை வழங்கிய போது, ரணில் விக்கிரமசிங்க அந்த விடயங்களை ஏற்கனவே செய்துள்ளார். சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார இருவரும் இன்று மக்களை கேலி செய்துள்ளனர்.


ஊடகப் பிரிவு

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button