News

இலங்கையின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஈரான் தூதுவராலயம் அதிருப்தி

இலங்கையின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஈரான் தூதுவராலயம் அதிருப்தியில் உள்ளதாக பலங்கொட கஸ்ஸப தேரர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் ஈரான் தூதுவராலயத்திற்கு சென்று வந்த பலங்கொட கஸ்ஸப தேரர் இந்த கருத்துனை குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஜனாதிபதி ஈரானின் இரண்டாவது கப்பலை மீட்க உதவியதாக கூறுகிறார்.முதலாவது கப்பலில் வந்தவர்கள் யுத்தம் செய்ய வந்தவர்கள் அல்ல. அவர்கள் நிராயுதபாணிகள். இலங்கைக்கு வர அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஜனாதிபதி கருணையானவர் என்றால் அவர் முதலாவது கப்பலை அனுமதித்திருக்க வேண்டும். முதலாவது கப்பலை பலி கொடுத்துவிட்டு இரண்டாவது கப்பலை மீட்டதாக பெறுமையடிக்கிறார்.

ஈரான் இலங்கை நெருங்கிய நண்பன் .. 30 வருட தீவிரவாத்தை முடிவுக்கு கொண்டு வர எமக்கு உதவி செய்த நாடு.எமக்கு கடன் வழங்கிய நாடு எமக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடு. எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றிய நாடு.எமது தேயிலை ஏற்றுமதியை கொள்வனவு செய்யும் நாடு என கூறினார்.

Recent Articles

Back to top button