News

டீசல் லீட்டர் ஒன்றில் 240 ரூபாயும்.. பெட்ரோல் லீட்டர் ஒன்றில் 120 ரூபாயும் நட்டம் ! விலை அதிகரிப்பிற்கு முன்னர் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு அறிவிப்பு.

உலக சந்தை எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப உள்நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்காததால், டீசல் லீட்டர் ஒன்றில் 240 ரூபாயும், பெட்ரோல் லீட்டர் ஒன்றில் 120 ரூபாயும் நட்டம் ஏற்படுவதாக எரிபொருள் விநியோகிக்கும் தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது உலக சந்தையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 55 சதவீதத்தாலும், ஒக்டேன் 95 விலை 65 சதவீதத்தாலும், டீசல் விலை 74 சதவீதத்தாலும் மற்றும் மசகு எண்ணெய் விலை 40 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளமையே இந்த கோரிக்கைக்கு முக்கிய காரணமாகும்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக ஒரு பேரல் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளமை, டாலரின் மதிப்பு உயர்வடைதல், காப்புறுதி மற்றும் கப்பல் கட்டணங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் எரிபொருள் விலையை கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும் என அந்நிறுவனங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையிலையே அரசு இன்று பெற்றோல் விலையை 81 ரூபாவாலும் பெற்றோல் விலையை 79 ரூபாவாலும் உயர்த்திதுள்ளது.

Recent Articles

Back to top button