News

மூன்று வாரங்களில் ஈரானை முடித்து விடலாம் என தப்புக்கணக்கு போட்டு கடுமையான எதிர்பாரா அடிகளை வாங்கி பின்னடைவை சந்தித்துள்ள ட்ரம்ப் & co. ஒரு விரிவான பார்வை

✍️ தில்ஷான் முகம்மத்

சதாம் ஹுசைனை வீழ்த்துவதற்கு அமெரிக்க கூட்டு படைகளுக்கு 20 நாட்களே தேவைப்பட்டன. அதைப்போல ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மூன்று வாரங்களை தேவைப்படும் என ட்ரம்ப் கணித்திருந்தார்.

மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் ஈரானிய ஆட்சி  ஒரு கமேனியிடமிருந்து மற்றுமொரு கமேனிக்கு கை மாறி இருக்கிறதே தவிர எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை.

எனினும் கடந்த 72 மணித்தியாலங்களில்….

1. நவீன ரேடார்களின் கண்களுக்கு புலப்படாது என்று பெருமை பேசப்பட்ட அதிநவீன F35 விமானம் ஈரானினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது.

2. இந்த விமானம் உட்பட மொத்தம் 16 யுத்த விமானங்களை அமெரிக்கா இழந்திருக்கிறது என Bloomberg செய்தி வெளியிட்டு இருக்கிறது.

3. அமெரிக்காவின் யுத்த கப்பலான USS Gerald Ford முப்பது மணித்தியாலங்கள் தீப்பற்றி எரிந்த நிலையில் யுத்த களத்தில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறது.

4. சுமார் 4000 கிலோமீட்டர் தூர இடைவெளியில் இந்து சமுத்திரத்தில் மத்தியில் அமைந்திருக்கும் ஐக்கிய ராஜ்யத்தின் (UK) டியார்கோ காசியா தளம் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

5. மூடப்பட்டிருக்கும் ஹார்மோஸ் நீரிணையை திறப்பதற்கு அமெரிக்காவின் எந்த ஒரு நட்பு  நாடும் முன் வரவில்லை.

5. இஸ்ரேலின் அதிநவீன விமானப்படைத்தளமான நவிடாம் தளம் சேதமாக்கப்பட்டிருக்கிறது.

6. இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையமான பெங்கூரியன் விமான நிலையத்தின் நிறுத்தப்பட்டிருந்த தனியார் விமானங்கள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருக்கின்றன.

7. இஸ்ரேலின் அணு உலை அமைந்திருக்கும் டிமோனா பகுதி தாக்கப்பட்டு இருக்கிறது.

8. இஸ்ரேலின் மிகப்பெரும் துறைமுகமான ஹைஃபா துறைமுகம் தாக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு ஹைஃபா வில் அமைந்திருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் சேதமாக்கப்பட்டிருக்கின்றன.

9. ஈராக் போரின்போது வரவழைக்கப்பட்ட NATO துருப்புக்கள், 22 வருடங்களின் பின்னர் ஈராக்கில் இருந்து முற்றாக வெளியேறியிருக்கிறது.

10. உலகின் மிகப்பெரிய தூதுவராலயமான பாக்தாத் நகரில் அமைந்திருக்கும் ஈராக்கின் அமெரிக்க தூதுவராலயத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஈரானின் ராணுவம் முற்று முழுதாக  அழிக்கப்பட்டு விட்டது, எமக்கு உதவிக்கு முன் வராத NATO நாடுகள் கோழைகள், ஹோர்மோஸ் நீரிணையை விரும்பியவர்கள் திறந்து கொள்ளட்டும் என யுத்தத்தில் இருந்து விலகும் நோக்கில் 72 மணித்தியாலத்திற்கு முன் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், இன்னும் 48 மணித்தியாலத்தில் ஹொர்மோஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் அத்தனை மின்சார நிலையங்களையும் தாக்கப் போவதாக எச்சரித்திருக்கிறார்.

இந்த எச்சரிக்கையின் பிண்ணனியும் ஜனாதிபதி ட்ரம்பின் தடுமாற்றமும், யுத்தத்தின் போக்கு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை பறைசாற்றுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button