News
சீமந்து விலை சுமார் 20 % வீதத்த்தினால் அதிகரிப்பு !

கட்டுமானத் துறைக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. ஒரு மூட்டை சிமெண்டின் விலை 175 – 200 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மடவளை லங்கா ஸ்டீல் நிறுவனத்தின் உரிமையாளர் மடவளை நியுசுக்கு தெரிவித்தார்.
இதன்படி, நுகர்வோர் ஒருவர் ஒரு மூட்டை சிமெண்டினை கொள்வனவு செய்வதற்கு 2,250 ரூபா செலவிட வேண்டியுள்ளது.
சிமெண்டிற்கு மேலதிகமாக கல், மணல் உள்ளிட்ட ஏனைய அனைத்து கட்டிடப் பொருட்களின் விலைகளும் தற்போது உயர்மட்டத்தில் காணப்படுவதாக எமது பிரதேச வியாபாரிகள் மேலும் கூறுகின்றனர்.



