ஜனாதிபதி பொய்யை சொல்லி நாட்டில் உள்ள அவரது ஆதரவாளர்களை ஏமாற்றலாம், ஆனால் அவரால் சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது

ஜனாதிபதி பொய்யை சொல்லி நாட்டில் உள்ள அவரது ஆதரவாளர்களை ஏமாற்றலாம், ஆனால் அவரால் சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்
இலங்கை தான் ஈரான் கப்பலை அழைத்தது என்று ஈரான் தூதுவரே சொல்லிவிட்டார். ஜனாதிபதி பொய்யை சொல்லி நாட்டில் உள்ள அவரது ஆதரவாளர்களை ஏமாற்ற சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது. ஈரான் கப்பலை நாட்டு அழைத்தால் நாமே அவர்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும்.நடுக்கடலில் தத்தளிக்க அவர்களை தத்தளிக்க விடம்ய்டியாயு
இந்த செயற்பாட்டால் 104 உயிர்கள் பலியாகியுள்ளன.அரசின் இந்த செயல்பாட்டிற்காக நாம் ஈரானிடம் மன்னிப்பு கோரவேண்டும். இவ்வளவு நடந்த பின்னரும் ஈரான் எமக்கு உதவுவதாக சொல்கிறது.இதுவே உண்மையான மனிதாபிமானம்.
நடு நிலை நடு நிலை என கூறும் ஜனாதிபதி அமீரகத்திற்கு கட்டாருக்கு அனுபாதம் தெரிவித்தார். ஆனால் குறைந்தது ஈரான் தூதுவரையாவது அழைத்து பேசவில்லை.இதுவா ஜனாதிபதியின் நடுநிலைமை.
அமெரிக்க விமானத்தை இலங்கைக்கு கொண்டுவர அனுமதி கேட்டதாக 20 ம் திகதி கூறிய ஜனாதிபதி ஏன் 5ம் திகதி ஈரான் கப்பல் தாக்கப்பட்ட பின்னர் நடத்திய ஊடக மாநாட்டில் கூறவில்லை. திடீரென வந்து 20 ம் திகதி பாராளுமன்றில் அமெரிக்க போர் விமானம் வர அனுமதி கேட்டது என கூறுவது ஏன் ?
நாட்டுக்கு பொய் சொன்ன ஜனாதிபதி இப்போது சர்வதேசத்திகு பொய் செல்லப் போய் முழு நாட்டையும் சிக்கலில் மாட்டிவிடக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான் குறிப்பிட்டார்.



