News
நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய வலுவான பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் கட்டியெழுப்ப முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்..

அரசாங்கத்தைப் பொறுப்பேற்றபோது நாட்டில் ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 470 ரூபாவாக இருந்ததாக பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது அதன் விலை 370 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகில் போர்ச் சூழல் நிலவியபோதிலும், குறைந்த விலையில் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்குவதற்காக ஆகஸ்ட் மாதம் வரை எரிபொருள் கொள்வனவுக்கான கட்டளைகள் (Orders) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய வலுவான பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் கட்டியெழுப்ப முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், வேறு அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் இந்நேரம் நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகளைக் காணக்கூடியதாக இருந்திருக்கும் என்றும் ருவான் ரணசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.



