News

இஸ்ரேலிய இராணுவத்தின் செயல்திறன் குறைந்து விடும் எனவும் அது “தனக்குள்ளேயே சரிந்துவிடும்” என்றும் இது இராணுவத்தின் உள் கட்டமைப்பையே சிதைத்துவிடும் என்றும் இஸ்ரேல் இராணுவத்தின் தலைமை அதிகாரி தெரிவிப்பு

இஸ்ரேலிய இராணுவத்தின் செயல்திறன் குறைந்து விடும் அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

எயால் ஜமிர் இந்த எச்சரிக்கையை பாதுகாப்பு அமைச்சரவைக்கூட்டத்தின்போது வெளியிட்டுள்ளதாக அல் ஜசீரா கூறுகிறது.

ஆளணி வெற்றிடங்கள் காரணமாக இஸ்ரேலிய இராணுவம் “தனக்குள்ளேயே சரிந்துவிடும் என்று அந்த அதிகாரி எச்சரித்துள்ளார்.

கடந்த புதன்கிழமையன்று (25) நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய எயால் ஜமிர், இராணுவம் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து 10 முக்கிய அபாய சமிக்ஞைகளை முன்வைத்துள்ளார்.

காஸா, லெபனான், ஈரான் மற்றும் மேற்குக் கரை எனப் பல முனைகளில் ஒரே நேரத்தில் போர் நடந்து வருவதால், வீரர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

எனினும், அதற்கு ஈடாக புதிய வீரர்கள் படைகளில் இணையாதது பெரும் சவாலாக உள்ளது.

இதே நிலை நீடித்தால், இராணுவத்தால் தங்களின் வழக்கமான பணிகளைக் கூடச் செய்ய முடியாமல் போகும் என்றும், அது இராணுவத்தின் உள் கட்டமைப்பையே சிதைத்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நெருக்கடியைத் தவிர்க்க, கட்டாய இராணுவச் சேவை மற்றும் தன்னார்வத் தொண்டு தொடர்பான புதிய சட்டங்களை உடனடியாக இயற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் இஸ்ரேலில் பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் தற்போதுள்ள 32 மாத கால கட்டாயச் சேவையை 36 மாதங்களாக நீடிக்க இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், லெபனானில் தரைவழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலிய அமைச்சரவை மேலதிகமாக 400,000 வரையிலான தன்னார்வ வீரர்களை அழைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இருப்பினும், நீண்டகாலமாகப் போரில் ஈடுபட்டுள்ள வீரர்களிடையே ஏற்பட்டுள்ள சோர்வு மற்றும் புதிய வீரர்களின் வெற்றிடங்கள் இராணுவத்தின் செயல்திறனைப் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button