News

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த கடன் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடியால் அதிகரிப்பு !!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் அளவு கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் 29,994.7 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, செலுத்த வேண்டிய உள்நாட்டுக் கடன் தொகை 18,675.3 பில்லியன் ரூபாவாகவும், வெளிநாட்டுக் கடன் தொகை 11,319.4 பில்லியன் ரூபாவாகவும் காணப்படுகிறது.

2024ஆம் ஆண்டு இறுதியில் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் தொகை 28,738.70 பில்லியன் ரூபாவாக இருந்ததுடன், அந்த கடன் அளவு 2025ஆம் ஆண்டு இறுதியில் 1,255.99 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது.CN

Recent Articles

Back to top button