News

இஸ்ரேலிய தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு

தெற்கு லெபனானில் சனிக்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், மற்றுமொரு ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர் உட்பட மூன்று லெபனான் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக இராணுவ ஆதாரம் ஒன்று AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. அவர்களது வாகனத்தை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Al-Manar தொலைக்காட்சியின் அல் ஷுஐப் (Al Shouaib) மற்றும் Al-Mayadeen தொலைக்காட்சியின் பாத்திமா ஃபடூனி (Fatima Fatouni) ஆகியோர் ஜெசின் (Jezzine) பகுதியில் கொல்லப்பட்டனர். இவர்களுடன் பாத்திமாவின் சகோதரரான ஒளிப்பதிவாளரும் உயிரிழந்துள்ளதாக அந்த ஆதாரம் குறிப்பிட்டுள்ளது.

தமது ஊடகவியலாளர்களின் மரணத்தை Al-Mayadeen மற்றும் Al-Manar ஆகிய இரு நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

Recent Articles

Back to top button