மின் கட்டண அதிகரிப்பு : நிலக்கரி ஊழலை மக்கள் தலையில் சுமத்தியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது !

நிலக்கரி ஊழலை மக்கள் தலையில் சுமத்தியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
வலைகுடா யுத்த நெருக்கடியை காரணம் காட்டி சேமித்து வைத்திருந்த எரிபொருளுக்கு விலைகளை அதிகரித்து மக்களின் வயிற்றில் அடித்த அரசாங்கத்தின் மின் கட்டண அதிகரிப்பானது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதை போன்றதாகும்.
ஆட்சிக்கு வர முன்னர் மின் கட்டணத்தை மூன்றில் ஒன்றால் குறைப்போம் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள்.ஆனால் ஆட்சிக்கு வந்தது முதல் கட்டம் கட்டமாக மின் கட்டணத்தை அதிகரிக்கவே செய்துள்ளார்கள்.நிலக்கரியில் ஊழல் இடம்பெற்றுள்ளதால் மின் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என நாம் முன்னரே சொன்னோம்.ஆனால் அரசோ தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்த நிறுவனத்திடம் அபராதம் விதித்ததாக கூறினார்கள். பிறகு ஏன் தற்போது மின் கட்டணத்தை அதிகரித்தீர்கள் என நாம் கேட்க விரும்புகிறோம்.
அரசாங்கத்தின் நிலக்கரி ஊழலை ஏன் மக்கள் பொறுப்பேற்க வேண்டும்.ஏற்கனவே எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அத்தியாவதிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.தற்போது மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள’ ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
திறைசேரியில் (மக்களிடம் வசூளித்த வரிப்பணம்) ஒரு டிரில்லியன் உள்ளதாக கூறும் ஜனாதிபதி இந்த நேரத்தில் அந்த பணத்திலாவது மாணியம் வழங்கி மக்களுக்கு ஆளுகை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.



