News

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் (SriLankan Airlines) மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering) ஆகியவற்றின் தலைவராகப் பதவி வகித்த சரத் கணேகொட தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

சரத் கணேகொடவின் பதவி விலகல் நாளை (31) முதல் அமலுக்கு வரவுள்ளதுடன், அதன் பதில் தலைவராக டிமால் அந்தர செயற்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ரோஷான் குணதிலக்கவும் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாகப் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent Articles

Back to top button