News
இலங்கை மின்சார சபை கடந்த பெப்ரவரி மாதம் 13 ம் திகதி முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது

இலங்கை மின்சார சபை கடந்த பெப்ரவரி மாதம் 13 ம் திகதி முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யுத்தம் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்ததால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வரும் எரிபொருள் விலைகள் பாரிய அளவில் அதிகரித்தால் இலங்கை மின்சார சபைக்கு மீண்டும் மின்சாரக் கட்டண அதிகரிப்பை கோரமுடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் Prof. K. P. L. Chandralal தெரிவித்துள்ளார்.



