News

மின்சாரக் கட்டணத்தை மேலும் 50 சதவீதத்தால் அதிகரிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு தற்போது கடும் அழுத்தம் !

மின்சாரக் கட்டணத்தை மேலும் 50 சதவீதத்தால் அதிகரிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு தற்போது கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

உலகில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் நாட்டில் நிலவும் வறட்சி போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் இவ்வாறு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் தயாராகி வருவதாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.

இது மக்கள் மீது சுமத்தப்படும் பாரிய சுமையாகும் எனவும், இதன் பின்னணியில் பெரும் சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலைமையின் கீழ், பொறுப்பற்ற முறையில் செயற்படும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை உடனடியாகப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சஞ்சீவ தம்மிக்க இங்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Recent Articles

Back to top button