News
சிகரட் மீதான வரியை 6 வீதத்தால் குறைத்து கம்பனிக்கு சலுகை வழங்கும் NPP அரசு : சபையில் விசனம்..

சிகரட் மீதான வரி கடந்த ஆட்சி காலத்தை விட தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கபீர் ஹஷீம் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் கடந்த நல்லாட்சி காலத்தில் 74 நான்கு வீதமாக இருந்த சிகரட் மீதான வரி தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் குறைக்கப்பட்டு அதன் பிரதிபலன் கம்பனீக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
அத்தியாவசிய பொருட்களுக்கு பாடசாலை உபகரணங்களுக்கு வெட் வரியை குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசு சிகரட் மீதான வரியை குறைத்து கம்பனிக்கு சேவை செய்வதாக விமர்சிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்க்கது.


