எந்தவொரு தொழிலும் செய்யாத லால்காந்த இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டியது எப்படி? – இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

விவசாய, கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களுக்குச் சொந்தமான, கடுவலைப் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர புதிய வீடு தொடர்பாக விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, ‘ஊழல், மோசடி மற்றும் வீணடிப்புக்கு எதிரான பிரஜைகள் சக்தி’ அமைப்பினால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பாராளுமன்ற உறுப்பினராக எந்தவொரு தொழிலோ அல்லது வியாபாரமோ செய்யாமல், முழுநேர அரசியலில் ஈடுபட்டு நாட்டுக்காக சேவையாற்றும் ஒருவருக்கு இவ்வாறானதொரு ஆடம்பர வீடு எவ்வாறு கிடைத்தது? இது முறையற்ற பணப் பரிமாற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்தா அல்லது அவரது உண்மையான வருமானத்தின் மூலம் பெறப்பட்டதா என்பது சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், இது குறித்து விசாரணை நடத்துமாறு அந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தச் சொத்து விபரங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் வருடாந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சொத்து விபரப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை வெளிப்படுத்துமாறும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
‘ஊழல், மோசடி மற்றும் வீணடிப்புக்கு எதிரான பிரஜைகள் சக்தி’ அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷாரவினால் இந்த முறைப்பாடு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டது.
சுஜீவ தத்சர



